crossorigin="anonymous">
ஆக்கங்கள்

‘தாராகே ஆகமனய’ மற்றும் “கடொல் எத்து” மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘தாராகே ஆகமனய’ மற்றும் “கடொல் எத்து” (மொழிபெயர்ப்பு நூல்) மற்றும் “எஹே கந்துலெலி” பாடல் வெளியீட்டு விழா நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு ஆனந்த வித்தியாலய குலரத்ன மண்டபத்தில் நடைபெற்றது.

இரண்டு நாவல்களின் முதல் பிரதிகளை ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவிடமிருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்டார்

பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு பிரதிகள் கையளிக்கப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய “எஹே கந்துலெலி” பாடலுக்கு யசஸ் மெதகெதரவினால் இசையமைக்கப்பட்டுள்ளதோடு பிரபல பாடகி அபிஷேகா விமலவீர பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர விசேட உரை ஆற்றினார்.

ஆனந்த கல்லூரி நூலகத்திற்கு வழங்கப்பட்ட புத்தகங்களின் தொகுதி அக்கல்லூரியின் அதிபர் லால் திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், அமைச்சர்களான அலி சப்ரி, டிரான் அலஸ், சுசில் பிரேம ஜயந்த மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், கல்வியியலாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 48 − = 43

Back to top button
error: