crossorigin="anonymous">
உள்நாடுபொது

2022/2023 பல்கலைக்கழகங்க அனுமதி விண்ணப்பம் இணையத்தளத்தில்

14ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் செயற்பாடு

2022/2023 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இம்மாதம் 14ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக நேற்று (06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களுக்காக விண்ணப்பங்களை அனுப்புதவற்காக மூன்று வார காலம் வழங்கப்படவிருப்பதாக தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதில் புதிய பாட நெறிகள் சிலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் இம்முறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெளிவுபடுத்தினார்.

2022 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 58 = 66

Back to top button
error: