பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நேற்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
இலங்கை ஓய்வுபெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.