சாய்ந்தமருதில் மகாகவி பாரதியார் நினைவு தினமும், பரிசளிப்பு நிகழ்வும்
சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் மற்றும் சாய்ந்தமருது கமு/கமு/எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயம் இணைந்து நடத்திய “மகாகவி பாரதியார் நினைவு தினமும், பரிசளிப்பு நிகழ்வும்” சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்சானின் நெறிப்படுத்தலில் எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். ஆரிஃப் தலைமையில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் நேற்று (11) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி முன்னாள் அதிபரும், சட்டத்தரணியுமான எம்.சி. ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு முன்மாதிரியான கற்பித்தல் முறைகள் தொடர்பிலும், பாடசாலை ஒழுக்க நெறி தொடர்பிலும், நாட்டின் தற்கால நிலைகள் பற்றியும் சிறப்புரை நிகழ்த்தினார்.
மகாகவி பாரதியார் நினைவு தின பிரதான உரையை சிரேஷ்ட இலக்கியவாதியும், ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியுமான ஏ. பீர் முகம்மட் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது கமு/கமு/எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய ஸ்தாபக அதிபர் ஏ.எல்.ஏ. நாபீத், ஓய்வு பெற்ற மூத்த ஆசிரியர் ஏ.எம். இப்ராலெப்பை, சாய்ந்தமருது கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. எச். சபீகா, சாய்ந்தமருது கலாசார நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. பி. நௌசாத், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய அபிவிருத்தி சபை செயலாளர் அஸ்வான் எஸ் மௌலானா, பிரதி செயலாளர் யூ. எல். என். ஹுதா உமர், சாய்ந்தமருது கமு/கமு/எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.