crossorigin="anonymous">
உள்நாடுபொது

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு - ஜனாதிபதி ஊடக பிரிவு

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (12) சற்று முன்னர் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது

ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று (11) நள்ளிரவு முதல் பல ரயில் நிலையங்களில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தன .

ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப் புறக்கணிப்பு காரணமாக இன்று (12) பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள்சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்துள்ளார்

இதையடுத்தே ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதியினால் சற்று முன்னர் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 44 = 54

Back to top button
error: