இலங்கை பரீட்சைகள் திணைக்களம் 2023 கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சைக்கான கால அட்டவணையை நேற்று (15) வெளியிட்டுள்ளது.
2023 கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி பரீட்சை நிறைவுபெறும் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றி 2023 ஆம் ஆண்டு மீண்டும் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் 16ஆம் திகதிக்கு முன்பதாக அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.