இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களை கண்காணிக்க நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த கண்காணிப்பின் போது சந்தேகநபர்களை கைது செய்யும் வழிமுறைகள் மற்றும் கைதிகள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட உள்ளன
கடந்த மூன்று வருடங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார் .
இதன் காரணமாக பொலிஸாருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.