(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மொரோக்கோவில் அண்மையில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினாலும் மற்றும் லிபியாவில் இடம் பெற்ற வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகையும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மொரோக்கோ, லிபியா நாடுகள் வெகு விரைவில் வழமையான நிலைக்குத் திரும்பவும் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றன.
இந்நிகழ்வு கொழும்பு தெவட்டகஹ அஷ்-ஷெய்க் உஸ்மான் வலியுல்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில் நேற்று (15) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் ரியாஸ் சாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
காயிப் ஜனாஸா தொழுகையை சங்கைக்குரிய அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் அப்துல் கரீம் தங்கள் அல்-ஐய்துரூஸி அவர்கள் நடாத்தியதுடன் விஷேட துஆ பிரார்த்தனையை அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலனா அல்-காதிரி நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் ஸாதாத்மார்கள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்திஜீவிகள் உட்பட பெரும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.