சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்.
சட்ட விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நேற்று (15) மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோதமாக கால்நடைகளை கடத்தல் முதலானவற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாக பிரதேச செயலாளர்கள், பொலிஸார், படைத்தரப்பினர், பொது சுகாதார பரிசோதகர்ளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பாதுகாப்பு கட்டளைத்தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், விசேட அதிரடிப்படை, சுகாதார சேவைகள் பணிப்பாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பொறியியலாளர் புவிச்சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகம், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.