crossorigin="anonymous">
பிராந்தியம்

மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா

மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையான புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று (16) நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்திருந்தனர்.

இதன்போது கற்றல் மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் பல்வேறு சாதனை படைத்த மாணவர்கள் அதிதிகளினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இந்நிகழ்வினை அலங்கரித்ததுடன், பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்த கல்வி இராஜாங்க அமைச்சருக்கு இதன்போது பாடசாலை நிருவாகத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்திருந்தனர்.

அசாதாரன சூழ்நிலை காரணமாக சாதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெறாதிருந்த நிலையில் கடந்த 4 வருடங்களாக மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு இதன்போது கௌரவிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 48 = 49

Back to top button
error: