பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது நேற்றிரவு (17) அநுராதபுரத்தில் வைத்து இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன காயமின்றி தப்பியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அநுராதபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றுகொண்டிருந்த போதே வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் அவரது வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.