crossorigin="anonymous">
உள்நாடுபொது

சமயங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

இலங்கை புத்தசாசன மதவிவகார அமைச்சும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் இணைந்து சமயங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் தெஹிவல ஜும்ஆ பள்ளிவாசலில் பில்டிங் பிறிச் புரோகிராம் (BUILDING BRIDGE PROGRAM) ஒன்றை நேற்று (21) ஏற்பாடு செய்திருந்தது.

வருகை தந்தவர்களுக்கு தொழுகை மேற்கொள்ளும் முறைகள், தொழுகைக்காக வுளூ (உடல் அங்கங்களை கழுவுதல்), மரணித்தவர்களை அடக்கம் செய்வது, அறபு எழுத்தணிக் கலை தொடர்பான விடயங்கள் , திருமண முறைகள் தொடர்பான விளக்கங்கள் , பள்ளிவாசலின் உள் நடைபெறும் ஏனைய நடைமுறைகள் தொடர்பாகவும் சிறந்த விளக்கங்களும் இஸ்லாமிய கற்கைக்கான மையத்தின் உறுப்பினர்களினால் வழங்கப்பட்டன.

நிகழ்வில் புத்தசாசன அமைச்சு, பெளத்த கலாசார திணைக்களம், இந்து கலாசார திணைக்களம், கிறிஸ்தவமத கலாசார திணைக்களம், மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பனவற்றின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 70 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இசட்.ஏ.எம்.பைசால் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம்.குமாரி கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்விற்கு தெஹிவல ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய கற்கைக்கான மையமும் இணைந்து தமது பங்களிப்பை வழங்கியிருந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 2 =

Back to top button
error: