crossorigin="anonymous">
உள்நாடுபொது

அலி சப்ரி ரஹீமை இடைநிறுத்தும் தீர்மானத்துக்கு பாராளுமன்றம் அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்கள் பாராளுமன்றக் குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இன்று (22) பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத துர்நடத்தை தொடர்பில் விசாரிப்பதற்காக அவ்விடயம் தற்போது பாராளுமன்றத்தின் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதாலும்,

உறுப்பினர் பாராளுமன்றத்தின் குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்து செயற்படுவதானது பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பில் சிக்கல் தன்மையைத் தோற்றுவிப்பதாலும் மேற்படி விசாரணை முடிவுறும் வரை அலி சப்ரி ரஹீம் அவர்கள் பாராளுமன்ற குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்தலாகாதென குறித்த தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல அவர்களினால் வழிமொழியப்பட்டதைத் தொடர்ந்து இதற்குப் பாராளுமன்றத்தின் அனுமதி வழங்கப்பட்டது.

74 மில்லியன் ரூபா பெறுமதியான 3.3 கிலோகிராம் தங்கம் மற்றும் 4.2 மில்லியன் ரூபா பெறுமதியான 41 கையடக்கத் தொலைபேசிகளை சட்ட விரோதமாக நாட்டுக்குள் எடுத்துவந்த பாராளுமன்ற உறுப்பினரிடம் 7.5 மில்லியன் ரூபா மாத்திரம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

எனினும், 80 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை எடுத்துவந்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜை ஒருவரிடமிருந்து 70 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாலும், எந்தக் காரணத்தின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினருக்கு குறைந்த தண்டப்பணம் அறவிடப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 7 = 2

Back to top button
error: