crossorigin="anonymous">
உள்நாடுபொது

நீர் கட்டணங்களுக்கு இலத்திரனியல் கட்டணப் பட்டியல் முறைமை அறிமுகம்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, நீர் கட்டணங்களை இலத்திரனியல் கட்டணப் பட்டியல் முறைமையின் கீழ் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் கொழும்பு தெற்கு, கண்டி தெற்கு, பொலன்னறுவை, திருகோணமலை ஆகிய தெரிவு செய்யப்பட்ட 04 பிரதேசங்களில் இந்த புதிய முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

344,697 நீர் வழங்கல் இணைப்புகளில் 326,124 இணைப்புகளுக்கான தொலைபேசி இலக்கங்கள் இலத்திரனியல் கட்டணப் பட்டியல்களுக்காக இதுவரை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஜனவரி மாதம் முதல் இந்த நடைமுறையை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் அமுல்படுத்தவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 74 + = 80

Back to top button
error: