crossorigin="anonymous">
பிராந்தியம்

புத்தளத்தில் தேசிய ஆகார கண்காட்சி

புத்தளம் நகர சபை மற்றும் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலை இணைந்து ஏற்பாடு செய்திருந்த தேசிய ஆகார கண்காட்சி இன்று (26) சவீவபுர தாய்சேய் நிலையத்தில் நடைபெற்றது.

புத்தளம் நகர சபை செயலாளர் எல்.பீ.ஜி. ரீத்திகா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது சுதேச இயற்கை ஆரோக்கிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையத்திலேயே நகரசபையின் இலவச ஆயுர்வேத வைத்திய சிகிச்சை நிலையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் ஆயுர்வேத யூனானி வைத்தியர்கள் பாடசாலை மாணவர்கள் முன்பள்ளி சிறார்கள் உள்ளிட்ட பெருமளவிலான மக்களும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 84 − 74 =

Back to top button
error: