இஸ்லாத்தின் இறுதி இறை தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும்.
மக்க மா நகரில் அப்துல்லாஹ் – ஆமினா ஆகிய இருவருக்கும் பிறந்தவரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
இறைவனால் காலத்திற்கு காலம் மனித குலத்தை நல்வழி காட்ட அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளின் வரிசையில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்.
உலகளவில் முஸ்லிம்கள் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினத்தை கொண்டாடுகின்றனர்