பிராந்தியம்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழ் கோட்டை பகுதியில் சிரமதானம்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் தொல்லியல் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி இணைந்து சிரமதானம் மரபுரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு பலகை திரை நீக்கமும் இன்று (28) நடைபெற்றது
.உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கையின் புராதன சின்னமாக விளங்குகின்ற யாழ்ப்பாணம் கோட்டையை அண்டிய பகுதிகள் சிரமதான பணி மூலம் இன்று சுத்தம் செய்யப்பட்டது.
யாழ் தொல்லியல் திணைக்களத்தின் யாழ்ப்பாண கோட்டை பொறுப்பதிகாரி, திணைக்கள அதிகாரிகாரிகள்ம், யாழ் பல்லைக்கழக கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் மாணவர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.