மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ.யின் இரத்ததான முகாம் நிறைவு
இரத்ததான முகாமில் இரத்ததானம் செய்த அனைவருக்கும் நன்றிகள்
கண்டி – மடவளையில் தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ. (YMMA) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட இரத்ததான முகாம் நேற்று (28) வியாழக்கிழமை பமடவளை ஸார் வை.எம்.எம்.ஏ. அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். ரிஷாட் தலைமையில் நடைபெற்றது
17வது தடவையாகவும் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் சுமார் 450 ற்கும் மேற்ற்பட்டவர்கள் இரத்ததானம் செய்ததாக மடவளை பஸார் வை.எம்.எ.ஏ அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.எம்.ஹசன் பிராஸ் தெரிவித்தார்
நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய தலைவர் அல்ஹாஜ் இஹ்ஸான் ஏ ஹமீத், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் முன்னாள் தலைவர் சஹீட் எம் ரிஸ்மி, விசேட அதிதிகளாக மடவளை பஸார் ஜாமிஉல் ஹைராத் ஜூம்ஆ பள்ளி வாசல் தலைவரும் அகில இலங்கை மொத்த சில்லறை வியாபார சங்கங்களின் தலைவருமான அல்ஹாஜ் டப்ளியு.எம். நஜீம் உற்பட .வத்தேகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதக அதிகாரிகள், பிரதேச சுகாதார அதிகாரிகள், கிராம சேவை நிலதாரி, அரச அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்தோகொண்டனர்
இரத்ததான முகாமில் கலந்தோகொண்டு இரத்ததானம் செய்த அனைவருக்கும மடவளை பஸார் வை.எம்.எ.ஏ அமைப்பின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அதன் பொதுச் செயலாளர் ஏ.எம்.ஹசன் பிராஸ் மேலும் தெரிவித்தார்.