இலங்கையில் பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்ட்டதுடன் ஆனாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை எதிர்வரும் 5ம் திகதி வரை அமுலிலிருக்கும்.
பயணக் கட்டுப்பாடுகள் மூலமான பெறுபேறுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன நேற்று (24) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்தார்.
மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டுமென்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாள் தோறும் இலங்கையில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கொவிட்19 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றார்கள். இதன் காரணமாக மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது அவசியம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.