crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘அமைச்சரவை மாற்றம் தவறான முடிவு’ – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதியின் தவறான முடிவு என கடுமையாக விமர்சித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தில் தவறான முடிவினை எடுத்துள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (23) தெரிவித்துள்ளார்.

முக்கியமாக சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து கெஹெலிய ரம்புக்வெலவை மாற்றியது முற்றிலும் தவறான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் சில நடவடிக்கைகளை எடுப்பது சரியானதா என்பது குறித்து ஜனாதிபதி சிந்தித்திருக்க வேண்டும். புதிய சுகாதார அமைச்சராக ரமேஸ் பத்திரனவை நியமிக்கும் தீர்மானம் தொடர்பில் எமது கட்சியின் அதிருப்தியை ஏற்கனவே ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளோம்.” என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அமைச்சர் பதவிகளை வழங்கியமை குறித்தும் சாகர அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 61 = 66

Back to top button
error: