crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேசிய அடையாள அட்டை விநியோகக் கட்டணங்கள் அதிகரிப்பு

தேசிய அடையாள அட்டை விநியோகக் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதுடன் 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்தை திருத்தி வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியூடாக கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையின் பிரதியை பெற்றுக்கொள்வதற்கான புதிய கட்டணம் 1000 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான கட்டணமும் அதிரிக்கப்பட்டுள்ளது.

Online ஊடாக முன்வைக்கப்படும் விண்ணப்பங்களுக்கான கட்டணம் 25 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது

நேரடியாக முன்வைக்கப்படும் விண்ணப்பங்களுக்கான கட்டணம் 500 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டைகளுக்கான புகைப்படக்கலைஞராக பதிவு செய்வதற்கு இதுவரை அறவிடப்பட்ட 10,000 ரூபா கட்டணம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பதிவுகளை புதுப்பிப்பதற்கான 2000 ரூபா கட்டணம் 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 2 =

Back to top button
error: