crossorigin="anonymous">
உள்நாடுபொது

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளனத்தின் 50 வது வருட பொன்விழா மாநாடு

பிரதம அதிதியாக பிரதமர் தினேஸ்குணவர்த்தன, கௌரவ அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா

(அஷ்ரப் ஏ சமத்)

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளனத்தின் 50 வது வருட பொன்விழா மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை 29.10.2023 காலை 10.00மணிக்கு கொழும்பு 7ல் உள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவர் லுக்மான் சஹாப்தீன் அடுத்த ஆண்டுக்கான தலைவர் ஷாம் நவாஸ் ஆகியோர்கள் தலைமையில் நடைபெறும்.

இம்மாநாட்டுக்கு பிரதம அதிதியாக பிரதமர் தினேஸ்குணவர்த்தன, கௌரவ அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, விசேட அதிதிகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.ஏ காதார் மொஹிதீன், இந்திய லோக் சபையின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்டீன் கலந்து சிறப்பிக்கின்றனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஈரான் நாட்டின் தூதுவருமான எம்.எம். சுகைர் சிறப்புரை நிகழத்துவார்.

பொன்விழா மாநாட்டை முன்னிட்டு தபால் திணைக்களத்தினால் 25 ருபா முத்திரையும் ஞாபகார்த்த தபால் உரையும் வெளியீட்டு வைக்கப்படுகின்றன.

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தெரிவு செய்யப்பட்ட பௌத்த மதகுரு தம்மானந்த தேரோ, ஜனாதிபதி சட்டத்தரனி எம்.எம். சுகைர், பேராசிரியை சுமதி சிவமோகன், ஆகியோர்களின் சேவைக்காக விசேட விருது வழங்கி கௌரவிப்பு படுகின்றனர்.

சம்மேளனத்தின் முன்னாள் தேசியத் தலைவர்களான என்.எம். அமீன், சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம். சஹீட், ரசிட் எம். இம்தியாஸ், அக்கரைப்பற்று எம். ஜ. உதுமாலெப்பை, கலாநிதி பி.எம். பாரூக், ஆகியோர் கௌரவிக்கப் படுகின்றனர்.

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சம்பந்தமாக பொன் விழாவினை முன்னிட்டு கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படும்
அத்துடன் களுத்துரை, மன்னார். கொழும்பு பொலநறுவை குருநாகல் போன்ற 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் நடாத்தப்பட்ட 150 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து சிறப்பிப்பார்கள்

சட்டத்தரனி ரசீத் எம். இம்தியாஸ் ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட பொன்விழா மலரும் பிரதம மந்திரதியிடம் கையளிக்கப்பட்டு வெளியீட்டு வைக்கப்படும்

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + = 9

Back to top button
error: