இலங்கை மக்களுக்கு பௌர்ணமி தினமான இன்று (28) இரவு 11.32 (23:31:48) முதல் நாளை (29) அதிகாலை 3.56 (03:56:25) மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்
பகுதியளவிலான சந்திர கிரகணத்தை பார்வையிடும் வாய்ப்பு காணப்படுவதாக மொரட்டுவை ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு பசிபிக் பெருங்கடல், கிழக்கு தென் அமெரிக்கா, வடகிழக்கு வட அமெரிக்கா, இந்து சமுத்திரம், தென் பசிபிக் சமுத்திரம், அட்லாண்டிக் சமுத்திரம் ஆகிய பகுதிகளில் இந்த சந்திர கிரகணம் தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பௌர்ணமி தினத்தில், சூரியன், சந்திரன் ஆகியவற்றுக்கு இடையில் பூமி வரும்போது, மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும் இவ்வேளையில் பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
முழு நிலவும் பூமியின் நிழலால் மறைக்கப்படும் போது முழுமையான சந்திர கிரகணமும், நிலவின் ஒரு பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்படும் போது பகுதியளவான சந்திர கிரகணமும் நிகழும்.