
பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பான இரண்டாவது உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (31) கொழும்பில் நடைபெற்றது.
சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB), சர்வதேச நிதி நிறுவனம் (IFC), பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIlB), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ( JISA), ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் (USAID), ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் தனியார் துறை மேம்பாட்டு பங்காளிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
2022 டிசம்பரில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த உயர்மட்ட வட்டமேசைக் கலந்துரையாடல், பொருளாதார மற்றும் கட்டமைப்பு தொடர்பான முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் நோக்கத்துடன் கூட்டப்பட்டது.