crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவித்தல்கள்

இலங்கை பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவித்தல்கள்

“பயங்கரவாத எதிர்ப்பு” சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

“பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட மனுக்கள் மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (07) இலங்கை பாராளுமன்றத்திற்கு அறித்தார்.

“பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் 2023 ஒக்டோபர் 03 ஆம் திகதி பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கப்படவில்லை என்பதால், அரசியலமைப்பின் 121(3) ஆம் உறுப்புரையின் பிரகாரம், சட்டமூலத்தை அரசியலமைப்புக்குட்பட்ட தன்மையை தீர்மானிப்பதற்கு உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்பதாலும்,

அதற்கமைய, இந்த சட்டமூலம் தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 10 மனுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளதாகவும், சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

“சேர்பெறுமதி வரி (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு தீர்மானத்தையும் பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

அதற்கமைய, மேற்படி சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீக்கிக் கொள்வதாக மனுதாரர்கள் வேண்டிய கோரிக்கைகக்கு ஏற்ப மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என உயர்நீதிமன்றத்தினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“நிகழ்நிலைக் காப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்மானம்

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “நிகழ்நிலைக் காப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கௌரவ சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவித்தார்.

சட்டமூலத்தின் அரசியலமைப்பு ரீதியான செல்லுபடியாகும் தன்மை பற்றிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்வரும் விடயங்களை உள்ளடக்குகின்றன:–

(i) வாசகங்கள் 3, 5, 7, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18,19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 36, 37, 42, 45, 53 மற்றும் 56 அரசியலமைப்பின் 84 (2) வது உறுப்புரையினால் தேவைப்படுத்தப்பட்டவாறு பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

(ii) எவ்வாறாயினும், மேற்படி சட்டமூலத்தின் பல வாசகங்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்மானங்களுக்கு உட்பட்டு, 3, 5, 7, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29 , 30, 31, 32, 36, 37, 42, 45, 53 மற்றும் 56 ஆம் வாசகங்கள் பாராளுமன்றத்தில் குழுநிலையில் திருத்தப்படுமாயின் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படலாம்.

அதற்கமைய, மேற்படி விடயங்களுக்கு உட்பட்டு, இந்தச் சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணாக இல்லை என்பது உயர் நீதிமன்ற த்தின் அபிப்பிராயமாகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல வாசகங்கள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு உட்பட்டு, இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படலாம், என பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

“தேசிய நீரளவை” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள்

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “தேசிய நீரளவை” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

சிறப்புரிமை கேள்விகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார் அவர்கள் 2023 ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை விடயம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி அவர்கள் 2023 ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை விடயம் தொடர்பில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்துவதற்கான பிரேரணையொன்று கொண்டு வரப்படலாம் எனவும் பிரதி சபாநாயகர் இன்று பாராளுமன்றத்துக்கு அறிவித்தார்.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக மேலும் இரண்டு உறுப்பினர்கள்

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக கௌரவ சபாநாயகர் அவர்களால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல அவர்களும் கௌரவ (டாக்டர்) (திருமதி) சீதா அரம்பேபொல அவர்களும் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக பிறந்து சபாநாயகர் அறிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 68 = 74

Back to top button
error: