“டெல்டா வைரஸ் வகை இதற்கு முன்னர் காணப்பட்ட வைரஸ் வகையிலும் பார்க்க வீரியம் கொண்டதாகும் .எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த தொற்று தொடர்பில் இலங்கையில் ஜவர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதனால் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மேலும் இருக்கக்கூடும் என்ற தீர்மானத்திற்கு வரமுடியும்” என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் திருமதி சுசீ பெரேரா தெரிவித்தார்
தொற்று நோயியல் பிரிவில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் திருமதி சுசீ பெரேரா இவ்வாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்
“இவ்வாறான சூழ்நிலையில் , சுமார் ஒரு மாத காலத்தில் நோய் வேகமாக பரவ முடியும் என்று சிந்திக்க முடியும் இதன் காரணமாக பயணக் கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட போதிலும் இந்த தளர்வுக்கான நிபந்தனை உண்டு.இதனால் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த சிறிய நாடு மீண்டும் முடக்க நிலைக்கு உள்ளாவதை தவிர்க்க வேண்டுமாயின் பயணக் கட்டுப்படு தொடர்பான நிபந்தனைகளை அனைவரும் கடைபிக்க வேண்டும் என்பதையே இந்த சந்தர்ப்பதில் வலியுறுத்த விரும்புகின்றேன்” என்றும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் திருமதி சுசீ பெரேரா மேலும் தெரிவித்தார்