10 தினத்திக்குள் 18 மெற்றிக்தொன் சேதன பசளை தயாரிக்க முடியும் – தொழில் முயற்சியாளர்
திருகோணமலை மாவட்டத்தின் வான் எல பிரதேசத்தில் சேதனப்பசளை உற்பத்தி செய்யும் நபர் ஒருவரின் உற்பத்தி முறைகளை மேற்பார்வை செய்யும் நோக்கில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள குறித்த இடத்திற்கு நேற்று (25) நேரடியாக களவி ஜயம் மேற்கொண்டார்.
அரசாங்க அதிபர் மேற்பார்வை செய்த நேரத்தில் இதுவரை 5 மெற்றிக்தொன் சேதன உரம் கையிருப்பில் உள்ளமை அவதானிக்கப்பட்டது. 10 தினங்களுக்குள் 18 மெற்றிக்தொன் சேதனப்பசளையை தயாரிக்க முடியும் என குறித்த தொழில் முயற்சியாளர் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தார்.
சேதன முறையிலான விவசாயத்தை மேம்படுத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்வாறான தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இவ்விஜயத்தில் மாவட்ட விவசாய பணிப்பாளர் கே.குகதாசன், தேசிய உர செயலகத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.பிரேமரத்ன உட்பட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.