மட்டக்களப்பு கல்லடியில் ஆரம்ப மருத்துவ சிகிட்சைப்பிரிவு திறந்துவைப்பு
மட்டக்களப்பு நாவலடியில் தற்காலிகமாக இயங்கிவந்த ஆரம்ப மருத்துவ சிகிட்சைப் பிரிவானது கல்லடி டச்பார் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு இன்று (04) திகதி கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களினால் நேற்று (04) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுணரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமாகிய செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமாகிய சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய சிவ.சந்திரகாந்தனின் பிரதிநிதியாக
இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் பூ.பிரசாந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் உயரதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.லட்சண்யா பிரசந்தன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.