crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரச நிறுவனங்களுக்கு வழிகாட்டல் வெளியிடப்படும்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பொலிஸ், சிறைச்சாலை, நன்னடத்தை நிலையம் ஆகியன தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

நபரொருவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் செயற்பட வேண்டிய விதம், உளநலம் பாதிக்கப்பட்ட நபரை வழிநடத்தும் விதம் மற்றும் சிகிச்சை அளித்தல் என்பன குறித்தும் வழிகாட்டல்கள் வௌியிடப்படும் என ஆணையாளர் கூறினார்.

டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த வழிகாட்டல்களை வெளியிட எதிர்பார்ப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 45 = 49

Back to top button
error: