எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், விரிவுரைகள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை நடத்தவும் அது தொடர்பான பிரசாரங்களை மேற்கொள்வதற்குமான அனுமதி எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட வினாப்பத்திரங்களை அச்சிடுதல், அவற்றை விநியோகித்தல், பரீட்சை வினாத்தாள்களின் வினாக்களை வழங்குவதாக அல்லது அதற்கு சமமான வினாக்களை வழங்குவதாக போஸ்டர்கள், பேனர்கள், கையேடுகள் ஆகியவற்றை அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.