crossorigin="anonymous">
உள்நாடுபொது

டெங்கு காய்ச்சலினால் 11 மாத குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலினால் கோண்டாவில் பகுதியை சேர்ந்த 11 மாத குழந்தையொன்று (25) உயிரிழந்தள்ளது.​

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயினால் இதுவரை 4 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், நாளாந்தம் 50 தொடக்கம் 60 பேர் டெங்கு நோயினால் அனுமதிக்கப்படுவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்

நாட்டில் நாளாந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 335 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 25 தினங்களில் 8,728 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 85,216 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனார்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அந்த மாகாணத்தில் மொத்தமாக 38,986 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 31 = 35

Back to top button
error: