காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முப்பெரும் விழா
காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலை 95 ஆவது ஆண்டு நிறைவு விழா, மாணவர் பரிசளிப்பு மற்றும் ஆசிரியர் கௌரவிப்பு ஆகிய முப்பெரும் விழாவை வியாழக்கிழமை (28) காத்தான்குடி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி ஜெஸீமா முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர் மற்றும் காத்தான்குடி நகரசபை செயலாளர் றிப்கா சபீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.எம். ஹக்கீம் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை நிர்வாகத்தால் கௌரவிக்கப்பட்டனர். அதிபர் பாடசாலை நிறைவேற்றுக் குழுவாலும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவ, மாணவிகள், க.பொ.த சாதாரண தரத்தில் 9ஏ, 8ஏ, 7ஏ சித்தி பெற்ற மாணவிகளும், க.பொ.த (உயர் தரத்தில்) கலை மற்றும் வர்த்தகப் பிரிவில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவிகள் பதக்கம் அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு மாணவிகளின் வரவேற்பு கீதம், பாடசாலையின் நிலையினை விபரிக்கும் விபரணப்படம், அறபுப் பாடல் போன்றன அரங்கேறின.