அவுஸ்திரேலிய, விக்டோரியாப் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ லீ டார்லமிஸ் OAM (Lee Tarlamis OAM), கௌரவ (திருமதி) பவுலின் ரிச்சர்ட்ஸ் (Pauline Richards) மற்றும் கௌரவ காரி மாஸ் (Gary Mass) உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று (04) பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது, இந்தத் தூதுக் குழுவினர் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவை சந்தித்ததுடன், இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம், இரண்டு பாராளுமன்றங்களிலும் காணப்படும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், தேர்தல் முறைமை, பாராளுமன்ற செயன்முறைகள் பற்றியும் இலங்கை மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் காணப்படும் கல்வி வாய்ப்புக்களை மேலும் அதிகரிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது அவுஸ்திரேலியாவிலுள்ள தம்ம விகாரையின் தலைமை தேரர் செவனகல நந்தரத்ன தேரர், பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து மற்றும் ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகர் ஆஷு மாரசிங்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
அதனையடுத்து தூதுக்குழுவினர் பாராளுமன்றத்தைப் பார்வையிட்டனர்.