crossorigin="anonymous">
உள்நாடுபொது

சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

பதவி விலகல் 2024 ஜனவரி 09 ஆம் திகதி முதல்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவிடம் கையளித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக இன்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்ததை அடுத்து கௌரவ சமிந்த விஜேசிறி அவர்கள் இவ்வாறு இராஜினாமா கடித்தைக் கையளித்துள்ளார்.

பதுளை தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யும் கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

கௌரவ சமிந்த விஜேசிறி அவர்களின் கடிதத்துக்கு அமைய பதவி விலகல் 2024 ஜனவரி 09 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இது பற்றி அறிவித்துள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 11 + = 20

Back to top button
error: