ஐக்கிய மக்கள் சக்தி இன்று (30) கொழும்பில் மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் ஆகியவற்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உட்பட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது
அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் 50 ஆயிரம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் திரள்வர் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது.