crossorigin="anonymous">
உள்நாடுபொது

6 வது பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து ஓய்வு

7 வது படைக்கல சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன பணிகளை பொறுப்பேற்பு

ஓய்வுபெறும் இலங்கை பாராளுமன்றப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்களினால் அடுத்துவரும் படைக்கலச் சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்னவுக்கு சம்பிரதாயபூர்வமாக செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் கையளிக்கும் (Outgoing Serjeant-at-Arms Mr. Narendra Fernando officially hands over the Mace and Sword to his successor Mr. Kushan Jayarathne} நிகழ்வு நேற்று (30) இலங்கை பாராளுமன்ற சபை மண்டபத்தின் வெள்ளிக் கதவுக்கு அருகில் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்கள் 42 வருடங்கள் பாராளுமன்றத்தில் சேவையாற்றி (30) ஓய்வுபெறவுள்ளதால் அடுத்துவரும் படைக்கலச் சேவிதருக்கு செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் இவ்வாறு சம்பிரதாயபூர்வமாக வழக்கிவைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் 6 வது படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்கள் 2018 முதல் படைக்கலச் சேவிதராக சேவையாற்றினார். அதற்கமைய பாராளுமன்றத்தின் 7 வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன இன்று (31) பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன ஆகியோரும் பாராளுமன்றத்தின் திணைக்களங்களின் தலைவர்களும், பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 3 =

Back to top button
error: