நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
தற்போது அறவிடப்படும் தண்ட பணத்தை 300 சதவீதத்தால் அதிகரிப்பது இதன் இலக்காகும்.
இது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கூறினார்.
நுகர்வோர் அதிகார சபை சட்டங்கள் கீழான கட்டளைகளுக்கு அமைவாக வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து தற்போது குறைந்த தொகையே தண்டப்பணமாக அறவிடப்படுவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மேலும் தெரிவித்தார்.