crossorigin="anonymous">
உள்நாடுபொது

வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக திருத்தம்

சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

சகல துறைகளிலும் பணியாற்றும் வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக திருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சரவை பேச்சாளர் இதனை தெளிவுபடுத்தினார்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் இணைந்து முன்வைத்த வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதை திருத்துதல் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதுவரை 65 வயது வரை காணப்பட்ட கட்டாய ஓய்வு வயதை அப்போதைய 2022ஆம் ஆண்டில் அரசாங்கம் 60 வயது வரை மட்டுப்படுத்தியது. அப்போதும் சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் சகல பிரிவு விசேட வைத்தியர்கள் கட்டாய ஓய்வுக்கு செல்லும் வயது 63 ஆக காணப்பட்டது. இது தொடர்பாக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி இந்த சகல துறை விசேட வைத்தியர்களின், சகல தர வைத்தியர்களினதும், பல் மற்றும் சத்திர சிகிச்சை வைத்தியர்கள், சகல நிர்வாக சேவை வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச சேவையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக நீடிப்பது தொடர்பாக ஓய்வூதிய சம்பள திருத்தக் கோட்பாடுகளில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் வெகுஜன் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + = 6

Back to top button
error: