crossorigin="anonymous">
உள்நாடுபொது

“முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா” (Muslim Aid) மருத்துவ உபகரணம் பிரதமரிடம் கையளிப்பு

“முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா” (Muslim Aid) நிறுவனத்தினம் இலங்கையில் கொவிட்19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அவசியமான சுமார் 30 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரண தொகுதியை நேற்று (02) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

வயோதிபர்கள் மற்றும் சிறுவர்களுக்காக பயன்படுத்தப்படக்கூடிய 3 வென்டிலேடர்கள் (Ventilators), 4 ஒக்சிஜன் கருவிகள் (Oxygen Therapy), 3000 பீ.பீ.ஈ (PPE). தொகுதிகள் உள்ளிட்ட மருத்துவ உபரகரணங்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

ஐக்கிய அமெரிக்காவின் அமெரிகெயார்ஸ் (Americares-USA) மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் முஸ்லிம் எயிட் தலைமையகம் (Muslim Aid’s Head Quarters-UK) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

1985ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் முஸ்லிம் எயிட் தலைமையகம், இதுவரை சுமார் 20 இற்கும் அதிகமான உலக நாடுகளுடன் இணைந்து  நிவாரண மற்றும் அபிவிருத்தி நிறுவனமாகச் செயற்பட்டு வருகிறது.
முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா அமைப்பு, சுனாமி பேரழிவை தொடர்ந்து, 2005ஆம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்டது.
நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, நீதி அமைச்சர்  அலி சப்ரி,  இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் பணிப்பாளர் ஃபைசர் கான் உள்ளிட்ட முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 8 =

Back to top button
error: