crossorigin="anonymous">
Uncategorizedஉள்நாடுபொது

பாராளுமன்ற குழுக்கள் மற்றும் பல அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் இந்த வாரம் கூடும்

பாராளுமன்ற குழுக்கள் மற்றும் பல அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கள் இந்த வாரம் கூடவுள்ளதாக இன்று (05) செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அதற்கமைய, நாளை (06) பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம், நாளை மறுதினம் (07) தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் மற்றும் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் என்பன பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளன.

அதேவேளை, நாளை (06) ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவும் கூடவுள்ளது. நாளை மறுதினம் (07) உயர் பதவிகள் பற்றிய குழு மற்றும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடவுள்ளது.

மேலும், பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் என்பன எதிர்வரும் 08 ஆம் திகதி கூடவுள்ளதாக தம்மிக்க தஸநாயக்க மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 1 =

Back to top button
error: