அக்குறணை பிரதேச சபை பிரிவில் “சௌபாக்கியா உற்பத்தி கிராமங்கள்” செயற்திட்டம்
“சௌபாக்கியா உற்பத்தி கிராமங்கள்” என்னும் செயற்திட்டத்தை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் அக்குறணை பிரதேசத்திற்குறிய செயற்றிட்டத்தின் முதல் கட்டம் கொனகலகல பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படுவதாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமதுத்தீன் தெரிவித்தார்
இந்த பிரதேசத்திற்கு உரிய உற்பத்தி திட்டமாக காளான் உற்பத்தி திட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் (05) கொனகலகல விகாரையில் நடைபெற்றது.
சுபீட்சமான எதிர்காலத்தை கட்டி எழுப்புதல், உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்தல், குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்கப்படுத்தல் என்பவற்றை இலக்காகக் கொண்டே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சமுர்தி, வதிவிடப் பொருளாதார, நுண் நிதி, சுய தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த செயற்றிட்டத்தின் அக்குறணை பிராந்தியத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அக்குறணை பிரதேச செயலாளர், அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்கள், அளவத்துக்கொடை பொலிஸ் நிலையம், பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.