குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வீடு
யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பேரேரா அவர்களுடைய வேண்டுகளுக்கு அமைவாக குறைந்த வருமானத்தினைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வீடமைக்கும் வேலைத்திட்டத்திம் முன்னெடுக்கப்படுகிறது
அதன் ஓர் அங்கமாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் இராணுவத்தினரின் சரீர உழைப்பில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டினை மருதங்கேணி பிரதேசத்தில் J/427 செம்பினயன்பற்று தெற்கு கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் குறைந்த வருமானத்தினைப் பெறும் துசிகாந்தன அஞ்சனாதேவி அவர்களுக்கு கையளிக்கும் நிகழவு யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தலைமையில் 2021 ஆடி மாதம 10 அன்று நடைபெற்றது.
இவ் வீடானது 55வது படைத் தலைமையகம் மற்றும் 553வது படைப்பிரிவுகளின் ஏற்பாட்டின கீழ் 10வது வியஜபாகு படையணியினரின் பூரண சரீர உழைப்பில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தற்போதைய நிலைமை கருதி குறைந்த அளவானோர் பங்குபற்றியதுடன் இவ்
நிகழ்விற்கு 55வது காலாற் படைப்பிரிவின் தளபதி, 553வது படைப்பிரிவின் படைத் தளபதி, இராணுவ உயரதிகாரிகள், அரச அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட குறிப்பிட்ட அளவினர் கலந்து கொண்டிருந்தனர் .