crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை (18) மாலை இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து கல்முனைப் பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்த காரும், கல்முனைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் காரில் பயணம் செய்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பொதுமக்கள், பொலிசாரின் உதவியுடன் படுகாயமடைந்தவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், சடலத்திதையும் கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த விபத்தில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 55-வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன் அவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 12 − 11 =

Back to top button
error: