crossorigin="anonymous">
உள்நாடுபொது

சுற்றுலா பயணிகளுக்கு நீண்டகால வீசா முறை தொடர்பிவ் அரசாங்கம் கவனம்

இலங்கையை டிஜிட்டல் சுற்றுலா பயணிகளுக்கு பொருத்தமான நாடாக மேம்படுத்துவதற்கான நீண்டகால வீசா அனுமதி முறையை Category of visas அனுமதிப்பது தொடர்பிவ் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நீண்ட கால வீசா அனுமதி முறையை Category of visas அனுமதித்தல் மற்றும் வரி நிவாரணம் வழங்கல் ஆகியன தொடர்பில் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆவணமொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு வெளியட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்திற்காக டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் என்ற ரீதியில் வாழ்நாளை கழிப்போர் டிஜிட்டல் சுற்றுலா பயணிகள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

டிஜிட்டல் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் நிதி ரீதியில் ஸ்தீரத்தன்மையைக் கொண்டுள்ளதுடன் ஒழுக்கத்துடன் செயல்படுபவர்கள பல மாதங்கள் வருடக் கணக்கில் நாட்டிற்குள் தங்கியிருப்பதால் வெளிநாட்டு நாணயம் நாட்டிற்கு புழங்குவதும் விசேடமான ஒன்றாகும்.

டிஜிட்டல் சுற்றுலா தொழில் துறையை மேம்படுத்துவதில் உலகில் பெரும்பாலான நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. போத்துக்கள் லிஸ்பன் கொலம்பியா இந்தோனிஷியா நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இலங்கைக்கான சுற்றுலா பயணிகளை கூடுதலாக கவர்ந்திழுக்கும் நோக்குடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது . இதனால் இலங்கைக்கு கூடுதலான பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − 11 =

Back to top button
error: