முல்லைத்தீவு மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் தலைவருமான க.விமலநாதன் அவர்களின் தலைமையில் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று (13) இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டு மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணி தொடர்பான விபரங்கள் பிரதேச செயலர் ரீதியாக ஆராயப்பட்டுள்ளது.
பொதுத் தேவைக்கு பயன்படுத்தப்படும் காணிகளை கையளித்தல், நீண்டகால மற்றும் குறுகிய காலம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காணிககளுக்கான அனுமதி பெறல், காணிக் கச்சேரி மூலம் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளுக்கு அனுமதி வழங்குதல் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலக ரீதியாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், மாகாண காணி உதவி ஆணையாளர், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள், காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.