மட்டக்களப்பில் ஆடு வளர்ப்புத் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்
மட்டக்களப்பில் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஆடு வளர்ப்புத் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு சிறுபொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியழேந்திரன் தலைமையில் இன்று (14) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது இவ்வமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட ஆடு வளர்ப்புத் திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ்வாண்டில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் டாக்டர். அமலஸ்ரீ சில்வா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், மாவட்டத்தின் பிரதேச செயலளர்கள், விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.