யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் ‘A Block’ கட்டடத் தொகுதியின் சம்பிரதாயபூர்வ திறப்பு விழா நேற்று முன்தினம் (14) வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டத்தொகுதியையும், கணக்கியல் துறை, நிதி முகாமைத்துவத் துறை ஆகியவற்றையும் திறந்து வைத்தார்