உள்நாடுபிராந்தியம்
மட்டக்களப்பு மாநகர சபையின் 49 வது சபை அமர்வு
மட்டக்களப்பு மாநகர சபையின் 49 வது சபை அமர்வு நேற்று (15) மட்டக்களப்பு மாநகர சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபைக்கான மேற்படி அமர்வானது மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் இதன்போது ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் மக்கள் நலன் சார்ந்து மேற்கொள்ளவுள்ள பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டிருந்தது
இதன்போது மேற்கொண்டுவரும் மற்றும் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் 40வது பொது அமர்வில் மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலர் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.