பல்வேறு நாடுகளை சேர்ந்த 40,82,598 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 18,96,99,448 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17,31,28,797 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 79,228 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள முதல் 5 நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளனர். புதிதாக அதிக தொற்று பரவி வரும் நாடுகளில் இந்தோனேசியா 56,757, பிரேசில் 52,789, இங்கிலாந்து 48,553, இந்தியா 39,072, அமெரிக்கா 36,420ஆக உள்ளது.