விளையாட்டு
ஜப்பான் ‘ஒலிம்பிக் கிராமத்தில்’ முதல் கொரோனா தொற்று உறுதி
![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/07/Screenshot-558-e1626519274813-780x470.png)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி தொடங்க ஆறு நாட்களே உள்ள நிலையில், அங்குள்ள ‘ஒலிம்பிக் கிராமத்தில்’ முதல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இங்குதான் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களும், விளையாட்டு அணிகளின் நிர்வாகிகளும் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் ஒரு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று ஏற்பாட்டுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மசா டகாயா தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020இல் நடக்க இருந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.(பிபிசி)